வடக்கே பட்டேல் பெயரையும், தெற்கே காமராஜர் பெயரையும் கூறி வாக்கு சேகரிக்க பாஜக முயற்சி - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
வடக்கே பட்டேல் பெயரையும், தெற்கே காமராஜர் பெயரையும் கூறி வாக்கு சேகரிக்க பாஜக முயற்சி செய்கிறது என்று மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த பிரமாண்ட கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தொடங்கியது . இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னதாக இன்று காலை சென்னை வந்தார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் நாகர்கோவிலில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் தோன்றி பேசுகிறார்கள்.
பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என நான் துணிச்சலோடு கூறினேன்; ராகுல் காந்தியை நான் பிரதமராக முன்மொழிகிறேன். “இளந்தலைவர் ராகுல் அவர்களே, ஒளிமயமான இந்தியாவை தருக” பிரதமர் மோடி தான் மட்டும் ஒளிமயமாக இருந்து கொண்டு நாட்டை இருளில் வைத்துள்ளார்.
புதுப்புது உடைகள், விதவிதமான தொப்பி அணிந்து நாடு, நாடாக சுற்றுகிறார் மோடி. துக்ளக் தர்பாரை பிரதமர் மோடி நடத்திக்கொண்டிருக்கிறார். மோடி ஆட்சியில் இந்தியா ஒளிமயமானதாக மாறவில்லை. இன்னும் சில வாரங்களில் நாட்டின் இளம் பிரதமராக ஆகப்போகிறவர் ராகுல்காந்தி.
மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மோடிக்காக பத்திரிக்கை விளம்பரம். வடக்கே பட்டேல் பெயரையும், தெற்கே காமராஜர் பெயரையும் கூறி வாக்கு சேகரிக்க பாஜக முயற்சி.
கருப்பு பணம் மீட்பு தொடர்பாக அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. இந்து, ராம் என்ற சொற்களை கூறி ஆட்சிக்கு வந்தவர் அந்த 2 சொற்களை கண்டு தற்போது அஞ்சுகிறார். ரூ.15 லட்சத்தை வங்கியில் செலுத்துவேன் என்று கூறிய மோடி ரூ.15 ரூபாயை கூட செலுத்தவில்லை.
இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான். உறுதியாக சொல்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story