கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்; ஓ. பன்னீர்செல்வம்


கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்; ஓ. பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 13 March 2019 8:55 PM IST (Updated: 13 March 2019 8:55 PM IST)
t-max-icont-min-icon

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகள் கூட்டம் இன்று நடந்தது.  இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Next Story