மாநில செய்திகள்

பணம் நிரப்பிவிட்டுஏ.டி.எம். எந்திர பணப்பெட்டியை பூட்டாமல் சென்ற ஊழியர்கள்வாடிக்கையாளர்கள் தகவலால் பல லட்சம் தப்பியது + "||" + ATM Machine Unlocked

பணம் நிரப்பிவிட்டுஏ.டி.எம். எந்திர பணப்பெட்டியை பூட்டாமல் சென்ற ஊழியர்கள்வாடிக்கையாளர்கள் தகவலால் பல லட்சம் தப்பியது

பணம் நிரப்பிவிட்டுஏ.டி.எம். எந்திர பணப்பெட்டியை பூட்டாமல் சென்ற ஊழியர்கள்வாடிக்கையாளர்கள் தகவலால் பல லட்சம் தப்பியது
சவுகார்பேட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள், அதில் இருந்த பணப்பெட்டியை பூட்டாமல் சென்றனர்.
பிராட்வே,

சென்னை சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் நேற்று காலை 10 மணிக்கு பணம் எடுக்கச் சென்றனர்.

அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணப்பெட்டி திறந்து கிடந்தது. இதனை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து யானைகவுனி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பல லட்சம் தப்பியது

உடனே போலீசார் விரைந்து வந்து ஏ.டி.எம். மையத்தை ஆய்வு செய்தனர். விசாரணையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பிய ஊழியர்கள், பணப்பெட்டியை பூட்டாமல் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வங்கி ஊழியர்கள் விரைந்து வந்து ஏ.டி.எம்.மில் இருந்த பணப்பெட்டியை பூட்டினர். இதனால் பல லட்சம் ரூபாய் தப்பியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் எதுவும் திருட்டு போய் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.