அனைத்து வகுப்புகளிலும் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளி கல்வி துறை இயக்குநர் உத்தரவு
ஏப்ரல் 12-ந் தேதிக்குள் அனைத்து வகுப்புகளிலும் தேர்வுகளை முடிக்க பள்ளி கல்வி துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,
2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அனைத்து வகுப்புகளிலும் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளி கல்வி துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி 2018-2019-ம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஏப்ரல் 12 ஆக இருக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்புகளிலும் ஏப்ரல் 12-ந் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story