மாநில செய்திகள்

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி + "||" + In the by-elections, MakkalNeedhiMaiam

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி
18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது.  18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட  விருப்ப மனுவை அளிக்க நாளை மறுநாள் கடைசிநாள். விருப்ப மனுவுடன் ரூ.10 ஆயிரத்துக்கு டி.டி. எடுத்து கட்சி தலைமை அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம். போட்டியிட விருப்பமுள்ளவர்கள் சென்னை, பொள்ளாச்சி தலைமையகங்களில் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் அறிமுக விழா, கோவை கொடிசியா வளாகத்தில் 24-ந்தேதி மாலை 6 மணி அளவில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடக்கிறது குறிப்பிடத்தக்கது.