நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மாபெரும் மாற்றம் வரும் சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மாபெரும் மாற்றம் வரும் சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 14 March 2019 2:05 PM IST (Updated: 14 March 2019 2:05 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மாபெரும் மாற்றம் வரும் என்று சசிகலாவை சந்தித்த பின் தினகரன் கூறியுள்ளார்.

சென்னை, 

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

 சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அமமுக சார்பில் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மாபெரும் மாற்றம் வரும். அப்போது உண்மைகள் வெளிவரும். 

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுக புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. தமிழகம், புதுச்சேரியில் 19 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story