பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி 2 பள்ளி மாணவிகள் மனு


பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி 2 பள்ளி மாணவிகள் மனு
x
தினத்தந்தி 14 March 2019 11:55 AM GMT (Updated: 2019-03-14T18:13:54+05:30)

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கோட்டாட்சியரிடம் 2 பள்ளி மாணவிகள் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி சம்பவத்தில் வெளியாகி வரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சென்னை, மதுரையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி கோபாலபுரம் தனியார் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Next Story