பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் வீட்டில் லேப்டாப், பென்டிரைவ்கள் பறிமுதல்
பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் சோதனை மேற்கொண்டதில் லேப்டாப் மற்றும் பென்டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீடு பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி காந்தி நகரில் உள்ளது. அங்கு சிபிசிஐடி போலீஸ் மாலை 4 மணியளவில் சோதனையை மேற்கொண்டது. இரவு 7:30 மணி வரையில் நடைபெற்ற சோதனையில் லேப்டாப் மற்றும் பென்டிரைவ்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திருநாவுக்கரசுவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும், பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவல்களை அளிக்க சிறப்பு உதவி எண்களையும் அறிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கும், cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கில் எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேரிட்டவை மற்றும் தெரிந்த தகவல்களை தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story