பறக்கும் படையினர் அதிரடி சோதனை: தமிழகத்தில் 2 நாளில் ரூ.4 கோடி சிக்கியது தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


பறக்கும் படையினர் அதிரடி சோதனை: தமிழகத்தில் 2 நாளில் ரூ.4 கோடி சிக்கியது தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 15 March 2019 10:34 PM IST (Updated: 15 March 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த 2 நாளில் ரூ.4 கோடி சிக்கி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் கடந்த 13, 14–ந் தேதிகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு ஆகியவை மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக 4 கோடியே 14 லட்சத்து 69 ஆயிரத்து 380 ரூபாய் பிடிபட்டது.

கடந்த 14–ந் தேதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு குழு மேற்கொண்ட சோதனையில் 87 ஆயிரத்து 500 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்து உள்ளார்.


Next Story