இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் நாளை தொடங்குகிறது
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் நீதிமன்ற வழக்கு காரணமாக 3 தொகுதிகள் தவிர்த்து 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் நீதிமன்ற வழக்கு காரணமாக 3 தொகுதிகள் தவிர்த்து 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருவாரூர் தொகுதிக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 17 தொகுதிகளுக்கும் விருப்ப மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் 352 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தனர்.
விருப்ப மனு அளித்தவர்களுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.
விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் விருப்ப மனு கட்டண ரசீதுடன் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் நேர்காணல் பெரம்பூர், திருப்போரூர், பூந்தமல்லி(தனி), சோளிங்கர், குடியாத்தம்(தனி), ஆம்பூர், ஒசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர்(தனி), தஞ்சாவூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), நிலக்கோட்டை(தனி), சாத்தூர், மானாமதுரை(தனி), பரமக்குடி (தனி), விளாத்திக்குளம் என்ற வரிசைப்படி தொகுதி வாரியாக நடைபெறுகிறது.
மேற்கண்ட தகவலை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story