பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம்


பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம்
x
தினத்தந்தி 16 March 2019 12:12 PM IST (Updated: 16 March 2019 12:12 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்கள் பரவுவதை தடுக்க கோரி சமூக வலைதள நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் நோக்கில், பேஸ்புக் ,வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.  

அந்த கடிதத்தில், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை சிபிசிஐடி போலீசார் சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

Next Story