ஐபிஎல் டிக்கெட் விற்பனை: காவல்துறை, ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு


ஐபிஎல் டிக்கெட் விற்பனை: காவல்துறை, ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 16 March 2019 11:19 AM GMT (Updated: 2019-03-16T16:49:03+05:30)

சென்னையில் ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் இடத்தில் காவல்துறை, ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சென்னை,

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி, ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. 12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. 23 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் மூலமாகவும், நேரடி கவுன்டர் மூலமும் இன்று காலை 11:30க்கு தொடங்கியது.  நேரடி கவுன்டர்களில் டிக்கெட்களை பெற நள்ளிரவு முதலே ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர். ஆயிரத்து ஐநூறு ரூபாய் முதல் ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் வரை டிக்கெட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை நடைபெறும் இடத்தில் காவல்துறை, ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மார்ச் 23-ம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

Next Story