டி.என்.பி.எஸ்.சி. நடத்த உள்ள குரூப்-2, 2ஏ தேர்வுகளை எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி சைதை துரைசாமியின் மனிதநேய மையம் வழங்குகிறது
டி.என்.பி.எஸ்.சி. நடத்த உள்ள குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகளை எழுத விரும்புபவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சியை வழங்குகிறது.
சென்னை,
காலியாக உள்ள குரூப்-1, 2, 2ஏ மற்றும் 4 உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனித நேய பயிற்சி மையம் இந்த பதவிகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இலவச பயிற்சியை அளித்து வருகிறது.
தற்போது குரூப்-1, மாவட்ட மாஜிஸ்திரேட்டு மற்றும் போலீஸ் பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
இலவச பயிற்சி வகுப்புகள்
இந்தநிலையில் குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான காலி இடங்கள் மற்றும் தேர்வு தொடர்பான அறிவிப்பு வருகிற மே மாதம் வெளியிடப்படும் நிலையில் இருக்கிறது.
ஆனால் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு இதற் கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு தேர்வர்கள் பயிற்சி பெறுவதற்கு கால அவகாசம் போதாது. இதனை மனதில் கொண்டு மனிதநேய மையம் இப்போதில் இருந்தே பயிற்சி அளிக்க திட்டமிட்டு இருக் கிறது.
இணையதளத்தில் பதிவு செய்யலாம்
குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகளை எழுத விரும்புபவர்கள் சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா இலவச பயிற்சி மையத்தில் சேரலாம். இந்த பயிற்சியை பெற www.mntfreeias.com என்ற மனிதநேய மையத்தின் இணையதளத்துக்கு சென்று Register for TNPSC Gr.II, IIA Ex-am 2019 என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளவும்.
பயிற்சி வகுப்புகளில் சேர பதிவு செய்து கொள்பவர்களுக்கு தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
மேற்கண்ட தகவலை மனிதநேய பயிற்சி மையத்தின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
Related Tags :
Next Story