அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள் யார்?


அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள் யார்?
x
தினத்தந்தி 17 March 2019 12:00 AM GMT (Updated: 16 March 2019 9:20 PM GMT)

அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள் யார்? என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதிகள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் உத்தேசமாக வெளியாகியுள்ளது.

அதன்படி, பா.ஜ.க.வுக்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு மத்திய சென்னை, தர்மபுரி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் (தனி), கடலூர், திண்டுக்கல் ஆகிய 7 தொகுதிகளும், தே.மு.தி.க.வுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இதேபோல், த.மா.கா.வுக்கு தஞ்சாவூர் தொகுதியும், புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பா.ஜ.க.வின் 5 தொகுதிகள்

தூத்துக்குடி - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்

சிவகங்கை - எச்.ராஜா

கோவை - சி.பி.ராதா கிருஷ்ணன் அல்லது வானதி சீனிவாசன்

ராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன் அல்லது குப்புராம்.

பா.ம.க.வின் 7 தொகுதிகள்

தர்மபுரி - சவுமியா அன்புமணி

அரக்கோணம் - ஏ.கே.மூர்த்தி

ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் வைத்திலிங்கம்

விழுப்புரம் (தனி) - வடிவேல் ராவணன்

கடலூர் - டாக்டர் சுந்தர்ராஜன்

மத்திய சென்னை - சாம் பால்

திண்டுக்கல் - சீனிவாசன்

தே.மு.தி.க.வின் 4 தொகுதிகள்

வடசென்னை - மோகன்ராஜ்

கள்ளக்குறிச்சி- எல்.கே.சுதீஷ்

திருச்சி - டாக்டர் இளங்கோவன்

விருதுநகர் - அப்துல்லா சேட்

த.மா.கா.

தஞ்சாவூர் - ரங்கராஜன்

புதிய நீதிக்கட்சி

வேலூர் - ஏ.சி.சண்முகம்

புதிய தமிழகம்

தென்காசி - டாக்டர் கிருஷ்ணசாமி.

Next Story