போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பில் தேமுதிக, பாமக வராதது ஏன்? தமிழிசை விளக்கம்


போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பில் தேமுதிக, பாமக வராதது ஏன்? தமிழிசை விளக்கம்
x
தினத்தந்தி 17 March 2019 11:00 AM IST (Updated: 17 March 2019 2:02 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்  அறிவிக்கப்பட்டது. இதில் தேமுதிக, பாமக வராதது ஏன்? என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன்  விளக்கம் அளித்தார்.

இதுதொடர்பாக  தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேமுதிக - பாமகவினர் ஏற்கனவே தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட்டதால் இன்று வரவில்லை. தொகுதிப் பங்கீட்டில் கையெழுத்திடாத பாஜக உள்ளிட்ட கட்சிகள் தான் இன்று பங்கேற்றன. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் ஒற்றுமையாக இருக்கின்றனர். விமர்சனம் இல்லை, விமரிசையாக வெற்றி பெறுவோம்.

பாஜகவுக்கான தொகுதி பங்கீடு பட்டியலுடன் இன்று டெல்லி செல்கிறேன். பா.ஜ.க. தலைமையுடன் ஆலோசித்த பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை தமிழகம் வருகிறார். அதிமுக வாக்குகளை பிரிக்கும் அளவுக்கு அமமுகவுக்கு பலம் இல்லை. எத்தனை தொகுதிகளில் தினகரனால் 20 ரூபாய் டோக்கன் கொடுத்துவிட முடியும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story