2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன் - டிடிவி தினகரன்
2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது:-
பணமூட்டையுடன் சென்று வெற்றி பெறலாம் என்றால் 40 தொகுதிகளிலும் தொழிலதிபர்களை நிறுத்தலாமே? கூட்டணிக்காக கட்சிகளை அதிமுக தேடிச்சென்றது இது தான் முதன்முறை. கூட்டணி அமைக்கப்பட்ட அன்றே தோற்கடிக்கப்பட்ட கூட்டணி அதிமுக-பாஜக கூட்டணி. தொண்டர்கள் விருப்பப்பட்டால் தேனி மக்களவை தொகுதியில் நான் நின்றாலும் நிற்பேன்.
தென் மண்டலம் மட்டுமின்றி அனைத்து மண்டலங்களிலும் ஆதரவு உள்ளது. 3 மாதமாக மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்களிடம் ஆலோசித்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது. ஓசூர் தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வரும் 27-ம் தேதி தொடங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story