இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மனைவிக்கு வாய்ப்பு


இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மனைவிக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 17 March 2019 10:30 PM GMT (Updated: 18 March 2019 4:26 AM GMT)

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மனைவிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், நேற்று இரவு நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அத்துடன் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18-4-2019 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க. அதிகாரபூர்வ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

பூந்தமல்லி (தனி)- ஜி.வைத்தியநாதன் (பூந்தமல்லி ஒன்றிய கழக துணை செயலாளர்). பெரம்பூர்- ஆர்.எஸ்.ராஜேஷ் (வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்). திருப்போரூர்- திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் (காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர்). சோளிங்கர்- ஜி.சம்பத் (பொதுக்குழு உறுப்பினர்). குடியாத்தம் (தனி)- கஸ்பா ஆர்.மூர்த்தி (குடியாத்தம் நகர துணை செயலாளர்). ஆம்பூர்- ஜே.ஜோதிராமலிங்கராஜா (மாதனூர் ஒன்றிய செயலாளர்). ஓசூர்- எஸ்.ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி.

பாப்பிரெட்டிபட்டி - ஏ.கோவிந்தசாமி (தர்மபுரி ஒன்றிய முன்னாள் செயலாளர்). அரூர் (தனி)- வி.சம்பத்குமார் (அரூர் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர்). நிலக்கோட்டை (தனி)- எஸ்.தேன்மொழி (திண்டுக்கல் மாவட்ட இணை செயலாளர்). திருவாரூர்- ஆர்.ஜீவானந்தம் (நாகை மாவட்ட அவை தலைவர், முன்னாள் அமைச்சர்). தஞ்சாவூர்- ஆர்.காந்தி (தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர்).

மானாமதுரை (தனி)- எஸ்.நாகராஜன் (பொதுக்குழு உறுப்பினர், மானாமதுரை தொகுதி). ஆண்டிபட்டி- ஏ.லோகிராஜன் (ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்). பெரியகுளம் (தனி)- எம்.முருகன். சாத்தூர்- எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்.

பரமக்குடி (தனி)- என்.சதன்பிரபாகர் (ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்). விளாத்திகுளம் - பி.சின்னப்பன் (இலக்கிய அணி இணை செயலாளர்). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story