மாநில செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு + "||" + MNM announced its candidate list on march 20

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பாராளுமன்ற தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 18 வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று வரை நடைபெற்றது. தி.மு.க.,  அ.தி.மு.க. என 2 பிரதான கூட்டணிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இன்று காலை 9 மணிக்கு கமல்ஹாசன் தலைமையில் தேர்தல் பணிக்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது.

நாளை மறுநாள் 20-ந்தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கண்ணாமூச்சி விளையாடுகின்றன; மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு
மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. மக்கள் நீதி மய்யத்திற்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்க கமல்ஹாசன் திட்டம்
மக்கள் நீதி மய்யத்திற்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்க அதன் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளார்.