மாநில செய்திகள்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் : பிரேமலதா விஜயகாந்த் + "||" + DMDK candidates list to released today says premalatha

மக்களவை தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் : பிரேமலதா விஜயகாந்த்
மக்களவை தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு,   கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை (வடக்கு), விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

மக்களவை தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் தே.மு.தி.க. ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“மக்களவை தேர்தலுக்கான தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும்.  தே.மு.தி.க., பா.ம.க. இடையே எந்த பிரச்னையும் இல்லை. ஏற்கனவே முடிவெடுத்தபடி தான் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

எனவே இந்த கூட்டணியில் எந்த சர்ச்சையும் கிடையாது. நிச்சயமாக நான்கும், நாற்பதும், நாளையும் நமதே. இது வெற்றி கூட்டணி என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15ல் முப்பெரும் விழா; பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்த் தலைமையில் திருப்பூரில் வருகிற செப்டம்பர் 15ந்தேதி முப்பெரும் விழா நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
2. ஊழல் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
3. விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏல அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏல அறிவிப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்து உள்ளார்.