குறளரசன் பெயரில் அவதூறு டி.ராஜேந்தர் கண்டனம்


குறளரசன் பெயரில் அவதூறு டி.ராஜேந்தர் கண்டனம்
x
தினத்தந்தி 18 March 2019 10:59 PM IST (Updated: 18 March 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

லட்சிய தி.மு.க.வை பயன்படுத்தி குறளரசன் மீது அரசியல் சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது.

சென்னை, 

லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

நானும், எனது மகன் குறளரசனும் டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளத்தில் இல்லை. ஆனால் குறளரசன் பெயரில் போலி கணக்கை உருவாக்கி அதில் தவறான செய்தியை பதிவிட்டுள்ளனர். குறளரசனுக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் படங்களுக்கு இசையமைக்கும் பணியில் இருக்கிறார்.

ஆனால் அவர் சொன்னதுபோன்று டுவிட்டரில் போலியான செய்தியை அவதூறாக பதிவிட்டுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன். லட்சிய தி.மு.க.வை பயன்படுத்தி குறளரசன் மீது அரசியல் சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது. 234 சட்டமன்ற தொகுதிகளிலும், 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று நான் சொல்லவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். அதற்கு காலஅவகாசம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story