ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் பா.ம.க. வேட்பாளர்கள் அறிவிப்பு 2-ம் கட்டமாக பட்டியல் வெளியீடு

ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் பா.ம.க. வேட்பாளர்கள் அறிவிப்பு 2-ம் கட்டமாக பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 18 March 2019 9:45 PM GMT (Updated: 2019-03-21T16:07:46+05:30)

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பா.ம.க.வுக்கு தர்மபுரி, விழுப்புரம் (தனி), கடலூர், அரக்கோணம், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

சென்னை, 

இதில் முதற்கட்டமாக 5 தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியானது. அந்த பட்டியலில் தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் (தனி) தொகுதியில் வடிவேல் ராவணன், கடலூர் தொகுதியில் டாக்டர் இரா.கோவிந்தசாமி, அரக்கோணம் தொகுதியில் ஏ.கே.மூர்த்தி, மத்திய சென்னை தொகுதியில் சாம் பால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மீதமுள்ள 2 தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்டார். அதன்படி ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் அ.வைத்திலிங்கம், திண்டுக்கல் தொகுதிக்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் க.ஜோதிமுத்து ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story