பொறியியல் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் திடீர் உயர்வு
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை,
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண்கள் 35 -ல் இருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே 2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்ட அரசாணையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50 -ல் இருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிசி, எம்.பி.சி, பிசி முஸ்லீம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45-ல் இருந்து 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவால் பொறியியல் படிப்புகளில் சேரும் தாழ்த்தப்ப்பட்ட பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறையும்.
Related Tags :
Next Story