மக்களவை தேர்தல்: சற்று நேரத்தில் அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை வெளியாகிறது
மக்களவை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியாகிறது
சென்னை,
அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாக உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தின் முன்பு தேர்தல் அறிக்கையை வைத்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்த உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் என்பதால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த அறிவிப்புகள் பெரும்பாலும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், தி.மு.க. தேர்தல் அறிக்கையும் இன்று வெளியாகிறது. தி.மு.க.தேர்தல் அறிக்கையில் மாநில பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story