பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம் -அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம் என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை,
மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதன் விவரம் வருமாறு;-
* மதம் மாறுபவர்கள் ஜாதி சான்றிதழில் மாற்றம் இன்றி மலைவாழ், பிற்படுத்தப்பட்டோர் மதம் மாற வழிவகுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* வீணாகும் தண்ணீரை பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்த புதிய திட்டம்.
* காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.
* புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம்.
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம்.
என கூறினார்.
Related Tags :
Next Story