நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார்? -தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார்? -தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு
x
தினத்தந்தி 19 March 2019 8:29 AM GMT (Updated: 19 March 2019 10:45 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்து தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது தொடர்பாக தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு  ஒளிபரப்பாகிறது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தல் மேகம் தமிழகம் மற்றும் புதுவையின் 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் சூழ்ந்து விட்டது.

தமிழகத்தில் இந்த தேர்தலுக்காக தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பிரதான கட்சிகள் முன்னணியில் இருக்கின்றன. தேசிய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரசும் தங்கள் டெல்லித் தலைமையின் அறிவிப்புக்கு காத்திருக்கின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 தொகுதிகளின் வெற்றி நிலவரம், மக்கள் மனநிலை பற்றிய பிரமாண்ட கருத்துக்கணிப்பை கடந்த மாத இறுதியில் தந்தி டி.வி. நடத்தி யது. அதன் முடிவுகள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் தொகுதி வாரியாக நேற்று முதல் இடம்பெற்று வருகிறது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியிலும் தந்தி டி.வி.யின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்கிறது. 

நாளை இரவு 9.30 மணிக்கு மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில்  தொகுதிகளின்  வெற்றி நிலவரமும், இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும், மோடி அரசின் செயல்பாடுகள் எப்படி? எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றின் கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாக உள்ளன.







































Next Story