மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி - செ.கு.தமிழரசன் அறிவிப்பு


மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி - செ.கு.தமிழரசன் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 March 2019 7:32 PM IST (Updated: 19 March 2019 7:32 PM IST)
t-max-icont-min-icon

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி என செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளார்.

40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தனியாக போட்டியிட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வந்தது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், இந்திய குடியரசு கட்சி கூட்டணி அமைக்கிறது. 

மக்களவை தேர்தலில் 1 தொகுதியிலும், இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் இந்திய குடியரசுக் கட்சி போட்டியிட உள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளார்.

Next Story