ஜாமீனில் வெளியே வந்தார் நிர்மலா தேவி
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை,
மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மார்ச் 12-ம் தேதியன்று அவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவரது சகோதரர் ரவியும், குடும்ப நண்பர் மாயாண்டியும் தலா 10 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு பிரமாண பத்திரங்களை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நிர்மலா தேவி இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வரும் நிர்மலா தேவி எங்கு வேண்டுமானாலும் தங்கலாம் எனவும் செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story