பாராளுமன்ற தேர்தல்: கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய சென்னையில் போட்டி -கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 21 பேர் கொண்ட பட்டியலை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். #LokSabhaElections2019
மக்கள் நீதி மய்யம் கட்சியோடு நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய இந்திய குடியரசு கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சியோடு இணைந்து நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று சந்தித்து பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியும், 3 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்தார்.
அவர்கள் விவரம் வருமாறு:-
திருவள்ளூர்- எம். லோகரங்கன்
மத்திய சென்னை - கமீலா நாசர்
அரகோணம் - ராஜேந்திரன்
வட சென்னை -ஏ.ஜி. மவுரியா
சிதம்பரம் - ரவி
சேலம் - பிரபு மணி கண்டன்
தர்மபுரி -ராக ஸ்ரீதர்
மயிலாடுதுறை - ரிபாயூதீன்
தேனி - ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி - பொன். குமரன்
திருநெல்வேலி - வெண்ணிமலை
கன்னியாகுமரி - எபினேசர்
திண்டுக்கல் - சுதாகர்
புதுச்சேரி எம்.ஏ. எஸ் சுப்பிரமணியம்
விழுப்புரம்- அன்பில் பொய்யா மொழி
வேலூர் - சுரேஷ்
கிருஷ்ணகிரி- காருண்யா
திருச்சி - ஆன்ந்த ராஜா
நீல கிரி - ராஜேந்திரன்
நாகபட்டினம் -குருவைய்யா
ஸ்ரீபெரும்புதூர்- சிவக்குமார்
Related Tags :
Next Story