ராமதாசுடன் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்திப்பு


ராமதாசுடன் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்திப்பு
x
தினத்தந்தி 20 March 2019 10:50 AM GMT (Updated: 2019-03-20T17:46:03+05:30)

பாமக நிறுவனர் ராமதாசை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சுதீஷ் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு, கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை (வடக்கு), விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 

மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும் தேமுதிக ஒப்புக்கொண்டுள்ளது. தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், தேமுதிக இளைஞரணி தலைவருமான சுதீஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தேமுதிகவின் வடசென்னை தொகுதி வேட்பாளர் மோகன்ராஜ் இருந்தார். 

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிடுவதால் கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் ராமதாசை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன் என்றார்.

Next Story