மக்களவைத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கை -வைகோ வெளியிட்டார்


மக்களவைத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கை -வைகோ வெளியிட்டார்
x
தினத்தந்தி 20 March 2019 12:15 PM GMT (Updated: 2019-03-20T17:45:24+05:30)

மக்களவைத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார். #MarumalarchiDravidaMunnetraKazhagam

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். 

இந்நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. தற்போது மக்களவைத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார்.

மதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கட்டும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தப்படும். 

விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதை கைவிட நடவடிக்கை எடுப்போம். 

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்துவோம். 

மின்சார சட்ட திருத்த முன்வடிவு 2018-ஐ திரும்பபெற வலியறுத்தப்படும். 

இணையதள வணிகத்திற்கு தடை, நியூட்ரினோ திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும், சீமை கருவேல மரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம். 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். 

கீழடி உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

சுதந்திர தமிழ் ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவோம். 

ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்துவோம் 

பொது சிவில் சட்டம் கூடாது,  சிறுபான்மையினர் நலன் காக்கப்படவேண்டும். 

மரண தண்டனை கூடாது, மணல் கொள்ளைகள் தடுக்க படவேண்டும்.

மீனவர் நலன் காக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story