நீதிபதி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி


நீதிபதி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 20 March 2019 7:20 PM IST (Updated: 20 March 2019 7:20 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நீதிபதி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

சென்னை அடையாறில் நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சரவணன் என்பவர் திடீரென நெத்தியில் துப்பாக்கியால்  
சுட்டுக் கொண்டார். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள்,  காவலர் சரவணனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் அவர் தற்கொலை முயற்சிக்கான கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் தனது தற்கொலை முயற்சிக்கு யாரும் காரணம் அல்ல என எழுதி வைத்திருந்தார். சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரிபவர் சரவணன் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல் பணிச்சுமை காரணமாக ஆங்காங்கே போலீஸார் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

Next Story