தமிழக பாஜக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்: கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி?


தமிழக பாஜக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்: கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி?
x
தினத்தந்தி 20 March 2019 8:22 PM IST (Updated: 20 March 2019 9:10 PM IST)
t-max-icont-min-icon

மக்களவை தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் அதிமுக, திமுக என இருபெரும் கூட்டணிகள் உருவாகியுள்ளன. 

அதிமுக கூட்டணியில் பாஜக - 5, பாமக - 7, தேமுதிக - 4, தமாகா - 1, புதிய நீதிக்கட்சி - 1, புதிய தமிழகம் - 1, என்.ஆர்.காங்கிரஸ் - 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இந்நிலையில் தமிழக பாஜக வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் ஹெச்.ராஜா, ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன். 

இதனை உறுதி செய்யும் வகையில் கோவையில் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற வைப்போம் என வானதி ஸ்ரீனிவாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Next Story