நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலுக்கு இதுவரை 33 பேர் வேட்புமனு தாக்கல்


நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலுக்கு இதுவரை 33 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 20 March 2019 5:42 PM GMT (Updated: 2019-03-20T23:12:29+05:30)

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

சென்னை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று  தொடங்கியது. இதில் முதல் நாளில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 20 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 2 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக இன்று 10 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அந்த வகையில் இன்றறைய நிலவரப்படி இரண்டு தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உள்ளது.Next Story