பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வீடியோ : மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்


பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வீடியோ : மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்
x
தினத்தந்தி 21 March 2019 11:06 AM IST (Updated: 21 March 2019 1:51 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வீடியோ வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கோவை

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

மயூரா ஜெயக்குமார் கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவராகவும் உள்ளார்.

பொள்ளாச்சி திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது. 
25-ந் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

Next Story