தே.மு.தி.க துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு


தே.மு.தி.க துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 21 March 2019 6:32 PM GMT (Updated: 2019-03-22T00:02:42+05:30)

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மைத்துனரும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான எல்.கே.சுதீஷ் விருகம்பாக்கம் சாலிகிராமம், வெங்கடேஷ்வரா நகரில் வசித்து வருகிறார்.

பூந்தமல்லி, 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மைத்துனரும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான எல்.கே.சுதீஷ் விருகம்பாக்கம் சாலிகிராமம், வெங்கடேஷ்வரா நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று முதல் திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் சுதீசுக்கு தனியாக ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் போட்டியிடுகிறார். விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டநிலையில் சுதீஷ் மற்றும் பிரேமலதா ஆகியோர்தான் கட்சி சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சுதீசுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது தே.மு.தி.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘‘சுதீஷ் போலீஸ் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல் காரணமாக அவருக்கு இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கும் வகையில் சுதீஷ் வீட்டின் முன் போலீசார் தங்குவதற்கு கூடாரம் அமைக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Next Story