தமிழகத்தில் மேலும் 10 இடங்களில் கோ கேஸ் ஆட்டோ எல்.பி.ஜி. விற்பனை மையம் தொடக்கம்
கோ கேஸ் ஆட்டோ எல்.பி.ஜி., எங்கள் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பாக இருந்து வருகிறது.
சென்னை,
கான்பிடென்ஸ் பெட்ரோலியம் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோ கேஸ் ஆட்டோ எல்.பி.ஜி., எங்கள் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பாக இருந்து வருகிறது. இந்தியாவில் 180-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.பி.ஜி. விற்பனை மையங்கள் உள்ளன.
தமிழகத்தில் தற்போது கோவை ராசக்காபாளையம், ஈரோடு குமாரபாளையம், நாமக்கல் பேளுக்குறிச்சி, விநாயகபுரம், சென்னை பரங்கிமலை, போரூர், மதுரவாயல், அஸ்தினாபுரம், அயப்பாக்கம், கோவில்பாக்கம் ஆகிய இடங்களில் எங்கள் நிறுவனம் எல்.பி.ஜி. விற்பனை மையங்களை புதிதாக தொடங்கி உள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் 47 விற்பனை மையங்களும், சென்னையில் மட்டும் 25 விற்பனை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வாகன எரிபொருளாக எல்.பி.ஜி.யை பயன்படுத்துவது நாளடைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு சென்னையில் மேலும் 10 விற்பனை மையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. இந்த நிதி ஆண்டுக்குள் நாடு முழுவதும் 200 விற்பனை மையங்களையும், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 500 விற்பனை மையங்களையும் திறக்க உறுதியான திட்டத்தை நிறுவனம் கொண்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் மற்றொரு முன்னணி தயாரிப்பான எலைட் எரிவாயுவானது வெடிக்கும் தன்மை இல்லாமலும், எடை குறைவாகவும் இருப்பதுடன் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story