நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தீவிரம்


நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தீவிரம்
x
தினத்தந்தி 22 March 2019 7:20 PM IST (Updated: 22 March 2019 7:20 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றம்,சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் 19-ந் தேதி முதல் தொடங்கி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், 4-ம் நாளான இன்று (மார்ச்-22), அதிமுக கூட்டணியில், கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் எல்.கே.சுதீஷ். ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் மணிமாறன், தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் மற்றும் தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ், தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திமுக சார்பில், பொள்ளாச்சியில் சண்முகசுந்தரம், திருவண்ணாமலையில் அண்ணாதுரை, பூந்தமல்லியில் கிருஷ்ணசாமி, தஞ்சையில் டி.கே.ஜி.நீலமேகம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில், மத்திய சென்னை தொகுதியில் கார்த்திகேயன், திருவள்ளூர் தொகுதியில் வெற்றிச்செல்வி, கடலூர் தொகுதியில் சித்ரா, தேனி மக்களவை தொகுதியில் சாகுல் ஹமீது, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ.வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேலும் பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ், புதுச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சுப்ரமணியம், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Next Story