விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம் - எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் கருமந்துறையில் நேற்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சேலம்
சேலம் மாவட்டம் கருமந்துறையில் நேற்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். மீத்தேன் திட்டம் உள்ளிட்ட தமிழகத்திற்கு கேடு விளைவிக்கும் அனைத்து திட்டங்களும் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் தான் தடுத்து நிறுத்தியுள்ளோம். விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விடமாட்டோம்.
இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதையடுத்து பெரியகுளம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக முதல்–அமைச்சரிடம் கேள்வி கேட்டபோது, அது கட்சி பிரச்சினை, சூழ்நிலைக்கு ஏற்ப வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். இது எல்லா கட்சியிலும் நடப்பது தான், என்றார்.
Related Tags :
Next Story