சேலம், தர்மபுரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி-மு.க.ஸ்டாலின் போட்டி பிரசாரம்
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்,
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், நேற்று சேலம் மாவட்டம் கருமந்துறையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ், சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மாலையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசை ஆதரித்தும், இடைத்தேர்தல் நடைபெறும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார்.
இதேபோல், சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று காலை நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.
இதைத்தொடர்ந்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
சேலம், தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டதால் இரு கட்சிகளின் தொண்டர்களும் உற்சாகம் அடைந்தனர்.
Related Tags :
Next Story