அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் திருப்பூரில் 27-ந்தேதி தொடங்குகிறார்


அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் திருப்பூரில் 27-ந்தேதி தொடங்குகிறார்
x
தினத்தந்தி 23 March 2019 7:27 PM GMT (Updated: 2019-03-24T00:57:41+05:30)

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் திருப்பூரில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார்.

சென்னை, 

தே.மு.தி.க. தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 27-ந்தேதி மாலை 4 மணியளவில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தொடங்கி ஏப்ரல் 16-ந்தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story