‘நாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
‘நாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்’ என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மோடி பலம் வாய்ந்த தலைவர். அவரை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் வெற்றி பெற போவது மோடி தான். தமிழகத்தில் பலமான கூட்டணி அமைந்து உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம் கூட்டணி வெற்றி பெறும். தூத்துக்குடியிலும் வெற்றி பெறுவேன். நல்ல திட்டங்கள் மக்களிடம் எடுத்து சொல்லப்படும்.
மக்களுக்கு சேவை செய்யக்கூடியதை பிரசாரம் செய்வேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்து மக்களுக்கு நல்லது செய்யும். என்னை எதிர்த்து பேசினால் பதில் அளிப்பேன். ஆனால் நாகரிகமாக வரம்பு மீறாமல் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story