சென்னையில் 23 ஆயிரம் தேர்தல் சுவர் விளம்பரங்கள் அழிப்பு; சென்னை மாநகராட்சி ஆணையர்


சென்னையில் 23 ஆயிரம் தேர்தல் சுவர் விளம்பரங்கள் அழிப்பு; சென்னை மாநகராட்சி ஆணையர்
x
தினத்தந்தி 24 March 2019 2:01 PM IST (Updated: 24 March 2019 2:01 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 23 ஆயிரம் தேர்தல் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு உள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  கொளுத்தும் வெயிலிலும், அனல் பறக்கும் வகையில் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி ஓட்டு பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.  முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் தேர்தல் பறக்கும் படைகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் சுவர்களில் செய்யப்பட்டிருந்த 23 ஆயிரம் தேர்தல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.  தேர்தல் தொடர்பாக 68 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

Next Story