மத்திய சென்னை தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் நம்பிக்கை
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி என்று தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை,
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் சென்னை மண்ணடியில் நேற்று நடைபெற்றது.
தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் கலந்துகொண்டார்.
தயாநிதி மாறன் பேச்சு
கூட்டத்தில் தயாநிதி மாறன் கூறியதாவது:-
மத்திய சென்னை தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி. நான் பிரசாரத்துக்கு வரும் போது எனக்கு சால்வைகள், மாலைகள் வேண்டாம். உங்கள் அன்பு மட்டும் தான் வேண்டும். இங்கு நான் மட்டும் வேட்பாளர் இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் வேட்பாளர்கள் தான். ‘வாட்ஸ்-அப்’ பெரிய கருவி. அதனை பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
ராகுல்காந்தி பிரதமராக வந்தால் தான் நாட்டுக்கு, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு. மத்தியில் நல்லாட்சி அமைந்தால், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகும் காலம் வரும். தமிழ்நாட்டுக்கும் விடிவுகாலம் பிறக்கும்.
வேண்டாம் மோடி
வேண்டும் மோடி. மீண்டும் மோடி என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். வேண்டாம் மோடி. போதும் மோடி என்பது நம்முடைய பிரதான கொள்கையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
கூட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜீவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் செல்லத்துரை, காங்கிரஸ் நிர்வாகி மணிபால் உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story