கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
சென்னை,
வேலூரில் உள்ள துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில், இன்று வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் சோதனை நடைபெறுவதால் தேர்தல் பணி மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story