ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக போடுவது நாடகம்; மக்களை ஏமாற்றுகிறார்கள்- முதல்வர் பழனிசாமி


ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக போடுவது நாடகம்; மக்களை ஏமாற்றுகிறார்கள்- முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 2 April 2019 3:23 PM IST (Updated: 2 April 2019 4:02 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக போடுவது நாடகம்; மக்களை ஏமாற்றுகிறார்கள் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சங்கரப்பேரியில் அதிமுக-பாஜக கூட்டணி பிரசார கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய நிலம் கொடுத்தது திமுக, அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்தவர் ஸ்டாலின். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிமுக மீது பழிபோடுவது எந்த விதத்தில் நியாயம்? . ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக போடுவது நாடகம்; மக்களை ஏமாற்றுகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு தான்.

சிலரின் சதியால் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வீணாக செல்லும் தண்ணீரை தேக்க, தடுப்பணை அமைக்க திட்டம் தயார் செய்துள்ளோம்.

நமக்கு திரளும் கூட்டத்தை கண்டு ஸ்டாலின் மிரண்டு போயிருக்கிறார்.  மக்களுக்கு சேவை செய்ய மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளோம்.

வலிமையான தலைமை, வலிமையான ஆட்சியை தரக் கூடியவர் பிரதமர் மோடி . நாடு வளம்பெற மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என கூறினார்.

Next Story