ஜனநாயகம் மீது அதிமுக முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது ; பணத்தின் மீது நம்பிக்கை இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
ஜனநாயகம் மீது அதிமுக முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது; பணத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை
அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களுக்கு கொல்லைப் புறம் தெரியாது. ஜனநாயகம் மீது அதிமுக முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது; பணத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நீதிமன்றங்களையும் மீறி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் மீது அவதூறு பரப்புகிறார். வருமான வரித்துறையினரிடம் சிக்கிய பணம் குறித்து ஆணித்தரமாக துரைமுருகன் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கவில்லை. விசாரணையின்போது உண்மை வெளிப்படும். தேர்தல் எப்போது நடத்த வேண்டும் என முடிவெடுப்பது தேர்தல் ஆணையம், அதிமுக கிடையாது என கூறினார்.
Related Tags :
Next Story