தர்மபுரி: அரூரில் ரூ.3.47 கோடி பறிமுதல்


தர்மபுரி: அரூரில் ரூ.3.47 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 3 April 2019 9:29 PM IST (Updated: 3 April 2019 9:29 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் அரூரில் பேருந்தில் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.47 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு பஸ்சில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.47 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

திருவண்ணாமலையிலிருந்து தருமபுரி சென்ற அரசு பஸ், அரூர் அருகே சென்று கொண்டிருந்த போது, செல்வராஜ் என்பவரிடம்  உரிய ஆவணங்களின்றி,  7 பைகளில் ரூ.3.47 கோடி பணம் இருந்தது.  பிடிபட்ட பணம் அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை ரூ.1582.19 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் இதுவரை ரூ.270.15 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story