தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்: கமல்ஹாசன்
ரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார், ஆதரவு தரக் கோரி மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ ரஜினியிடம் பேசும்போது ஆதரவு தருவதாக சொன்னார், ஆதரவு தரக் கோரி மீண்டும் மீண்டும் வலியுறுத்த முடியாது. தேர்தல் பிரசாரத்திற்கு ரஜினி வந்தால் சந்தோஷம்.
தொற்றுநோய் போல பரவியுள்ள பணம் கொடுக்கும் வழக்கத்தை தடுக்க வேண்டியது நமது கடமை, அவ்வாறு கொடுப்பவர்கள் எனது கட்சியில் இருந்தால், அவர்களை நீக்குவோம் வேலூர் தொகுதியில் தேவைப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story