கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு கட்சித்தலைமை அறிவிப்பு
கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என அக்கட்சித்தலைமை அறிவித்துள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்குமாறு, அம்மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க.வினர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவர்களது கோரிக்கையை ஏற்று, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்று அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.
அதன்படி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் அனைவரும், பா.ஜ.க.வின் வேட்பாளர்களுடைய வெற்றிக்குப் பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story