தாம்பரத்தில் வாகன சோதனை ரூ.4½ கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்


தாம்பரத்தில் வாகன சோதனை ரூ.4½ கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 April 2019 1:59 AM IST (Updated: 5 April 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனசோதனையில் ரூ.4½ கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் 20 பெட்டிகளில் சுமார் ரூ.4½ கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், வெள்ளி பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், உடனடியாக நகைகளுடன் வேனை தாம்பரம் கோட்டாச்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

ரூ.4½ கோடி நகைகள் பறிமுதல்

அதில், அந்த தங்க, வைர நகைகள் சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல நகை கடையில் இருந்து விற்பனைக்காக தியாகராயநகர், நங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகளில் உள்ள அவற்றின் கிளைகளுக்கு கொண்டு சென்றுவிட்டு, இறுதியாக தாம்பரத்தில் உள்ள நகை கடைக்கு கொண்டு செல்வதாக வேனில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்தும், அந்த ஆவணங்களில் நகை கொண்டுவந்த வாகனத்தின் பதிவு எண் இல்லாததால் ரூ.4½ கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட் களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story